TVK | TN Politics | அதிமுக டூ தவெகவுக்கு தாவிய பெரும் புள்ளிக்கு.. ரூ.7.5 கோடி அபராதம்
அதிமுக டூ தவெகவுக்கு தாவிய பெரும் புள்ளிக்கு.. ரூ.7.5 கோடி அபராதம்
TVK | TN Politics | அதிமுக டூ தவெகவுக்கு தாவிய பெரும் புள்ளிக்கு.. ரூ.7.5 கோடி அபராதம்
#Madurai #TNPolitics #TVK
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே அனுமதியை மீறிச் சட்டவிரோதமாகக் கற்கள் மற்றும் கிராவல் மண் வெட்டி கடத்தியதாக தவெக நிர்வாகி பாரி மற்றும் முருகேசனுக்கு 7 கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நிலையூர் கருவேலம்பட்டி பகுதியில் முறைகேடாகக் கனிம வளம் அள்ளப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்பேரில் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் சிவஜோதி இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார். அதிமுகவிலிருந்து விலகித் தவெகவில் இணைந்தவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள இந்த அபராதத் தொகை கனிம வளத்துறை கணக்கில் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
