Ranipet | ADMK | ஆற்காடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் சுகுமார் வேட்புமனு தாக்கல்

ஆற்காடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் சுகுமார் வேட்புமனு தாக்கல்

Ranipet | ADMK | ஆற்காடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் சுகுமார் வேட்புமனு தாக்கல் #tnelection2026 #admk #tnpolitics #ranipettai #SMSukumar #thanthitv ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார், தாலுகா அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக ஆற்காடு பேருந்து நிலையத்தில் இருந்து நிர்வாகிகளுடன் 2 கிலோ மீட்டர் பேரணியாக சென்ற அவர், வாக்கு சேகரித்தவாறு சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆற்காடு தொகுதியின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு மருத்துவக் கல்லூரியை நிச்சயம் கொண்டு வருவேன் என உறுதியளித்தார். மேலும், விவசாயிகளின் நலன் காக்க நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்தல், மஞ்சள் சாகுபடியை ஊக்குவிக்க நேரடி விற்பனை நிலையங்கள் உருவாக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என்று கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com