AIADMK | Campign | டீ போட்டு கொடுத்து வாக்கு கேட்ட அதிமுக வேட்பாளர்
AIADMK | Campign | டீ போட்டு கொடுத்து வாக்கு கேட்ட அதிமுக வேட்பாளர் #tnelection2026 #campign #nilgiris #thanthitv நீலகிரி மாவட்டம் குன்னூரில் அதிமுக வேட்பாளர் சாந்தி ராமு, தேநீர் கடையில் டீ போட்டு கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் சாந்தி ராமு, முன்னதாக குன்னூரில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் வழிபாடு நடத்தினார். அப்போது, அவருக்கு பரிவட்டம் கட்டி பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று சாந்தி ராமு, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள தேநீர் கடையில் டீ குடித்தபடியே பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் சாந்தி ராமு, அங்கு வந்த வாடிக்கையாளர்களும் டீ போட்டுக் கொடுத்து, ஆதரவு திரட்டினார்.
