Dharapuram | ADMK | தாராபுரம் தொகுதியில் பிரசாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளர் சத்தியபாமா

தாராபுரம் தொகுதியில் பிரசாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளர் சத்தியபாமா

Dharapuram | ADMK | TN Election 2026 | தாராபுரம் தொகுதியில் பிரசாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளர் சத்தியபாமா #dharapuram #ADMK #TNelection2026 #tnelection #thanthitv தாராபுரம் தொகுதியில் பிரசாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளர் சத்தியபாமா திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சத்தியபாமா தனது தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்கினார். காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு பிரசாரத்தை தொடங்கிய சத்தியபாமா, பொண்ணாபுரம், கோவிந்தாபுரம், நாரணாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், அப்பகுதி மக்களிடம் நீண்ட கால கோரிக்கைகளை சத்தியபாமா கேட்டறிந்தார். குறிப்பாக, கோவிந்தாபுரம் சுற்றுவட்டாரத்தில் விளையக்கூடிய சின்ன வெங்காயம் மற்றும் மக்காச்சோளத்தைப் பாதுகாக்க குளிர்சாதனக் கிடங்கு அமைக்கப்படும் என அவர் உறுதி அளித்தார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எனது முதல் பணி எனவும் சத்தியபாமா வாக்குறுதி அளித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com