தாராபுரத்தில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமா வேட்பு மனு தாக்கல்... பிரமாண்டத்தை காட்டிய தொண்டர்கள்
தாராபுரத்தில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமா வேட்பு மனு தாக்கல்... பிரமாண்டத்தை காட்டிய தொண்டர்கள்
#dharapuram | #admk | #tnelection2026 தாராபுரத்தில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமா வேட்பு மனு தாக்கல்... பிரமாண்டத்தை காட்டி மிரட்டி விட்ட தொண்டர்கள் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமா, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்யும் முன், அமராவதி ரவுண்டானாவில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் பெண்கள் உற்சாகமாக நடனமாடி, பேண்ட் வாத்தியங்கள் மற்றும் மேள தாளங்களுடன் ஊர்வலமாக சென்றனர். மேலும் பிரச்சார வாகனத்தில் பயணித்த போது பேசிய அதிமுக வேட்பாளர் சத்தியபாமா, தனக்கு மகத்தான ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், உங்களில் ஒருவராக இருந்து செயல்படுவேன் என்றும் உறுதி அளித்தார்.
