Maduranthakam | ADMK | மதுராந்தகத்தில் 2வது முறையாக போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல்
Maduranthakam | ADMK | TN Election | மதுராந்தகத்தில் 2வது முறையாக போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் #maduranthakam #admk #tnelection2026 #electioncommission #tnelection #election2026 #electionswiththanthitv #thanthitv #therthalthiruvizha மதுராந்தகத்தில் 2வது முறையாக போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தனித்தொகுதியில் இரண்டாவது முறையாக அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல், தொண்டர்கள் புடைசூழ தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். முதலில் பாஜக, அமமுக உள்ளிட்ட தோழமைக் கட்சி நிர்வாகிகளுடன் சென்ற அதிமுக வேட்பாளர் மரகதம், மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு ஏராளமான ஆதரவாளர்கள் திரண்டு பேண்ட் வாத்தியங்களுடன் சாலையில் ஊர்வலமாக சென்று, பின் பிரச்சார வாகனத்திலும் பயணித்தார். இறுதியாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் நரேந்திரனிடம் தனது வேட்பமனுவை தாக்கல் செய்தார்
