Gudalur | ADMK | ஈஸ்டர் பண்டிகை தினத்தில் தேவாலயத்தில் ஆதரவு திரட்டிய அதிமுக வேட்பாளர் ஜெயசீலன்

ஈஸ்டர் பண்டிகை தினத்தில் தேவாலயத்தில் ஆதரவு திரட்டிய அதிமுக வேட்பாளர் ஜெயசீலன்

Gudalur | ADMK | TN Election 2026 | ஈஸ்டர் பண்டிகை தினத்தில் தேவாலயத்தில் ஆதரவு திரட்டிய அதிமுக வேட்பாளர் ஜெயசீலன் #Gudalur | #ADMK | #TNElection2026 | #thanthitv ஈஸ்டர் பண்டிகை - தேவாலயத்தில் ஆதரவு திரட்டிய அதிமுக வேட்பாளர் நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெயசீலன், ஈஸ்டர் பண்டிகை தினத்தில், தேவாலயத்திற்கு சென்று வாக்கு சேகரித்தார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் சுட்டெரிக்கும் வெயிலிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கூடலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெயசீலன், நாள்தோறும் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். இந்தநிலயில் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினமான இன்று, கூடலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள, செயின்ட் தாமஸ் குழந்தை இயேசு தேவாலயத்திற்கு அதிமுக வேட்பாளர் ஜெயசீலன் நேரில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது தேவாலயத்திற்கு வருகை தந்த பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஈஸ்டர் வாழ்த்துகளை கூறிய வேட்பாளர் ஜெயசீலன், துண்டு பிரசுரங்களை வழங்கி தமக்கு அதிமுக சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com