Tittakudi | DMK | ``மே 10க்கு பிறகு..'' | வாக்குறுதி அளித்த அமைச்சர் சி.வெ. கணேசன்
Tittakudi | DMK | TN Election 2026 | ``மே 10க்கு பிறகு..'' | வாக்குறுதி அளித்த அமைச்சர் சி.வெ. கணேசன் #tittakudi #DMK #tnelection2026 #thanthitv திட்டக்குடியில் அமைச்சர் சி.வெ. கணேசன் தீவிர பிரசாரம் கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் அமைச்சர் சி.வெ. கணேசன், அடரி, அ.களத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். திறந்தவெளி வாகனத்தில் வீதி வீதியாகச் சென்று பிரசாரம் செய்த அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தின் போது பேசிய அவர், திமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மகளிர் உரிமைத்தொகை மாதம் 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என உறுதியளித்தார். இதற்கான தொகை மே மாதத்திற்குப் பிறகு நேரடியாகப் பயனாளிகளின் வங்கித் தொகையில் வரவு வைக்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகையை உயர்த்தி வழங்குவதற்கான அரசாணை பிறப்பிக்கப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார். கூட்டணி கட்சியினருடன் இணைந்து தொகுதி முழுவதும் அவர் மேற்கொண்டு வரும் இந்தப் பிரசாரம் பொதுமக்களிடையே கவனம் பெற்றுள்ளது.
