திருத்தணியில் EPS-ஐ வாழ்த்தி அதிமுகவினர் முழக்கம்..பக்தர்கள் எதிர்ப்பு

x

திருத்தணி முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனியில் பங்கேற்ற நடிகை காயத்திரி ரகுராம் மற்றும் அதிமுகவினர், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி முழக்கமிட்டதற்கு, தங்கத்தேர் பவனி உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அ.திமுகவை சேர்ந்த நடிகை காயத்திரி ரகுராம், திருவள்ளூர் நகர திமுக செயலாளர் ரவிச்சந்திரன் உட்பட உபயதாரர்கள் 6 பேர் தங்கத்தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்த பணம் செலுத்திய நிலையில், தேரை வடம் பிடித்து தொடங்கி வைக்க, கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டது. அப்போது, எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை கையில் வைத்துக்கொண்டு அ.தி.மு.க.வினர் வாழ்த்து முழக்கமிட்டனர். கோயில் விதிகளுக்கு புறம்பாக அ.தி.மு.க.வினர் நடந்துகொள்வதாகக்கூறி பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்