SIR மீட்டிங்கில் சென்னை மாநகராட்சி கமிஷனரிடம் அதிமுகவினர் கடும் வாக்குவாதம்

x

சென்னையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையரிடம் அதிமுக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக சார்பில் 4 பேர் பங்கேற்றனர். கட்சிக்கு இருவர் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், அதிமுக சார்பில் நான்கு பேர் பங்கேற்று மாநகராட்சி ஆணையரும், தேர்தல் அலுவலருமான குமரகுருபனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்