ADMK | Kovai | அதிமுக வேட்பாளர் கே.ஆர். ஜெயராம் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர். ஜெயராம், சவுரிபாளையம், சிங்காநல்லூர் மற்றும் உப்பிலிபாளையம் ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுக தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க, வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பிரச்சாரத்தின் போது தன்னை வரவேற்ற பெண் குழந்தைக்கு, தனது கழுத்தில் இருந்த மாலையை அணிவித்து கே.ஆர். ஜெயராம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார். அதனைத் தொடர்ந்து வீடு வீடாகச் சென்று பெரியவர்கள் மற்றும் பெண்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். இந்த வாக்கு சேகரிப்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மகேஸ்வரி கலந்துகொண்டு கே.ஆர். ஜெயராமுக்கு ஆதரவாகப் பேசினார்.

X

Thanthi TV
www.thanthitv.com