Kodanadu Crime | "EPS-க்காக இல்லை.."கொடநாடு வழக்கு தொடர்பாக ஜெ பாதுகாப்பு அதிகாரி விளக்கம்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தனக்கு தெரிந்த உண்மைகளை தெரிவித்துள்ளதாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாள் தெரிவித்துள்ளார். சம்மன் அனுப்பியதை தொடர்ந்து விசாரணைக்கு ஆஜரான அவரிடம், சுமார் 3 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வீரபெருமாள், தான் ஜெயலலிதாவிற்கு மட்டுமே பாதுகாப்பு அதிகாரியாக செயல்பட்டதாக தெரிவித்தார். மேலும், மீண்டும் விசாரணைக்கு சிபிசிஐடி போலீசார் அழைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
Next Story
