அதிமுக உட்கட்சி விவகாரம் - வெளியாகிறது தீர்ப்பு
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய மனுவில் இன்று தீர்ப்பு வெளியாகிவுள்ளது. அதிமுக உள் கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இது சம்பந்தமான மனுக்களை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ரவீந்திரநாத், புகழேந்தி ஆகியோர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தற்போது இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில், தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது.
Next Story