அதிமுக பேனர் கிழிக்கப்பட்ட விவகாரம் : தினகரன் உள்ளிட்ட 100 பேர் மீது வழக்கு

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் கடந்த மாதம் 30-ஆம் தேதி அதிமுக பேனர் கிழிக்கப்பட்ட விவகாரத்தில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் உள்ளிட்ட 100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பேனர் கிழிக்கப்பட்ட விவகாரம் : தினகரன் உள்ளிட்ட 100 பேர் மீது வழக்கு
Published on
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் கடந்த மாதம் 30-ஆம் தேதி அதிமுக பேனர் கிழிக்கப்பட்ட விவகாரத்தில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் உள்ளிட்ட 100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில், தினகரன் அஞ்சலி செலுத்த வரும் போது, முதல்வர் மற்றும் துணை முதல்வரின் பதாகைகள் கிழிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக அதிமுக சார்பில் கமுதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தினகரன் உள்ளிட்ட 100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com