"சந்திரபாபு நாயுடு மீது ரோஜா கடும் விமர்சனம்"

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் சிறுமூளை சுருங்கிவிட்டது என்று ஆளும்கட்சி எம்.எல்.ஏவும் நடிகையுமான ரோஜா தெரிவித்துள்ளார்.
"சந்திரபாபு நாயுடு மீது ரோஜா கடும் விமர்சனம்"
Published on

ஆந்திர மாநில சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய அவர், சந்திரபாபு நாயுடுவையும் அவரது மகனையும் கடுமையாக விமர்சித்தார் . முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சாதாரணமானவர் அல்ல எனவும் சொந்த கொடி சொந்த வாக்குறுதி மூலம் வெற்றி பெற்று முதல்வராக அமர்ந்திருக்கிறார் என்று ரோஜா குறிப்பிட்டார். முதல்வரை குறை கூறுபவர்கள் தகுதியே இல்லாதவர்கள் என்று பேசிய அவர் சந்திரபாபு நாயுடுவுக்கு சிறுமூளை சுருங்கிவிட்டதாக தெரிவித்தார். நேரத்தை வீணாக்காமல் அவரை அழைத்துச் சென்று மருத்துவமனையில் வைத்தியம் பார்க்க வேண்டும் என்று ரோஜா பேசியதால் சட்டப்பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com