"மத்திய அரசு உயர் அதிகாரி என்னை பாஜக கூட்டணிக்கு அழைத்தார்"..பரபரப்பை ஏற்படுத்திய திருமா

மத்திய அரசின் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் அதிகாரி ஒருவர், பாஜக கூட்டணிக்கு வருமாறு தன்னுடன் பேசியதாக திருமாவளவன் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள வணிக வளாகத்தில் வணிகர் தினத்தை முன்னிட்டு விசிக சார்பில், தேர்தல் அங்கீகார வெற்றி விழா மாநாடு நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மத்திய அரசின் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் அதிகாரி ஒருவர் பாஜகவுடன் கூட்டணிக்கு வருமாறு தன்னை அழைத்தார் என்றும், அதற்கு தான் கையெடுத்து கும்பிட்டு திருப்பி அனுப்பி விட்டேன் எனவும் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com