Kerala | Rahul Gandhi | "வெற்றிக்கான அறிகுறி.." | ராகுல்காந்தி பெருமிதம்
கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவளித்த மக்களுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த வெற்றி ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீது, மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிக்காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். பொறுப்புள்ள ஒரு நிர்வாகத்தை கேரள மக்கள் எதிர்பார்ப்பதாகவும், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்கான அறிகுறியாக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கும், வெற்றிக்காக உழைத்த கட்சி நிர்வாகிகளுக்கும் ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்
Next Story
