"குறமகள் இளவெயினிக்கு மதுரையில் திருவுருவச் சிலை" - அமைச்சர் சாமிநாதன்
சங்க காலப் புலவர் குறமகள் இளவெயினிக்கு மதுரையில் திருவுருவச் சிலை நிறுவப்படும் என, சட்டப்பேரவையில் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார். கவிக்கோ அப்துல் ரகுமான் பிறந்த நாளான நவம்பர் 9-ஆம் நாள் மாவட்ட அளவில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றும் அவர் தெரிவித்தார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 'அறிஞர்களின் அவையம்' என்ற பெயரில் துறை சார்ந்த வல்லுநர்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படும் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 'தொல்காப்பியர் சுழலரங்கம்: மாநிலம் தழுவிய வெள்ளி வட்டம்' சிறப்புப்பொழிவு நடத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்ட வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும், தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்படும் என்றும் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.