அதிர்வை கிளப்பும் அடுத்த அதிரடி - இன்று அவையில் காத்திருக்கும் மெகா சம்பவம்
மாநில சுயாட்சி தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று முக்கிய தீர்மானத்தை கொண்டு வருகிறார். கடந்த 25ஆம் தேதி சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மாநில சுயாட்சியை உறுதி செய்து, மாநில உரிமைகளை நிலைநாட்டினால்தான் தமிழ் மொழியை காக்க முடியும், தமிழினத்தை உயர்த்த முடியும் என்று உறுதிபட தெரிவித்து, அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என கூறியிருந்தார். மேலும், இந்தியாவின் கூட்டாட்சித் தன்மையைக் காக்கவும், மாநிலங்களின் சுயாட்சியை வென்றெடுக்கவும் மிகச்சரியான முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
Next Story