கேரளா முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த 12 வயது சிறுவன்! - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரள காவல்துறை தலைமையக கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் கேரளா முதல்வரை கொல்லப்போவதாக மிரட்டல் விடுத்து, பின்னர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொலைபேசி அழைப்பு எர்ணாகுளத்திலிருந்து வந்தது தெரியவந்ததால், அங்கு சென்று போலீசார் விசாரித்தனர். இதில், 7-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவன் தனது தந்தையின் போனிலிருந்து இவ்வாறு பேசியது தெரியவந்தது. பள்ளியில் ஏதாவது எமர்ஜென்சி என்றால் 112 என்ற எண்ணுக்கு அழைத்து உதவி கோரலாம் என தெரிவித்ததாகவும், அதனால் விளையாட்டிற்காக இப்படி செய்ததாகவும் சிறுவன் கூறியுள்ளான். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பினராயி விஜயன் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com