90 வயது.. வீல் சேரில் வந்த மன்மோகன் சிங்... பாராட்டும் ஆம் ஆத்மி - வெட்கக்கேடு என விமர்சிக்கும் பாஜக

90 வயது.. வீல் சேரில் வந்த மன்மோகன் சிங்... பாராட்டும் ஆம் ஆத்மி - வெட்கக்கேடு என விமர்சிக்கும் பாஜக

மாநிலங்களவையில் டெல்லியில் அதிகாரிகள் நியமனம் குறித்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது, 90 வயதாகும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வீல் சேரில் அழைத்து வரப்பட்டிருந்தார். மசோதாவிற்கு எதிராக வாக்களிக்க அவர் அழைத்து வரப்பட்டிருந்த நிலையில், உடல்நலம் சரியில்லாதவரை காங்கிரஸ் இரவு வரையில் வீல் சேரில் அமர்த்தியிருந்தது என பாஜக விமர்சனம் செய்துள்ளது. கூட்டணியை தக்க வைப்பதற்காக காங்கிரஸ் செய்திருக்கும் இந்த செயல் வெட்கக்கரமானது எனவும் சாடியிருக்கிறது. பாஜக விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா, மன்மோகன் சிங் பங்கேற்றது, ஜனநாயகத்தின் மீதான அவரது நம்பிக்கையை காட்டுகிறது என தெரிவித்துள்ளார். மன்மோகன் சிங் வருகையை எதிர்க்கட்சிகள் பாராட்டும் சூழலில், கருப்பு சட்டத்திற்கு எதிராக நேர்மையின் கலங்கரை விளக்கமாக நின்ற மன்மோகன் சிங்கிற்கு நன்றி என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com