85 ஜோடிகள்... 85 வகை சீர்வரிசை பொருட்கள்.. 85வது பிறந்தநாளில் ராமதாஸ் தடபுடல் ஏற்பாடு

85 ஜோடிகள்... 85 வகை சீர்வரிசை பொருட்கள்.. 85வது பிறந்தநாளில் ராமதாஸ் தடபுடல் ஏற்பாடு
Published on

தனது 85வது பிறந்தநாளை முன்னிட்டு, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் 85 ஜோடிகளுக்கு 85 சீர்வரிசை பொருட்களுடன் திருமணம் நடத்தி வைத்தார். கும்பகோணத்தில், தமிழ் முறைப்படி நடைபெற்ற இந்த திருமண நிகழ்வில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். திருமணத்தை நடத்திவைத்து பேசிய ராமதாஸ், பெண் குழந்தைகளை சாபமாக பார்க்கும் நிலை மாறி, வரமாக பார்க்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாக தெரிவித்தார். அதனால்தான் பெண் தேவதைகளுக்கு திருமணம் நடத்தி வைப்பதாக கூறிய அவர், மணமக்கள் நூற்றாண்டு காலம் வாழ வாழ்த்தினார்...

X

Thanthi TV
www.thanthitv.com