Chennai | DMK | ``5 ஆண்டுகளில் 50 ஆண்டுகால சாதனை..'' | சோழிங்கநல்லூர் திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷ்
Chennai | DMK | ``5 ஆண்டுகளில் 50 ஆண்டுகால சாதனை..'' | சோழிங்கநல்லூர் திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷ் #chennai #DMK #tnelection2026 #thanthitv சோழிங்கநல்லூர் திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷ் தீவிர வாக்கு சேகரிப்பு சென்னை சோழிங்கநல்லூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அரவிந்த் ரமேஷ், மடிப்பாக்கம் ஏரி பகுதியில் நடைப்பயிற்சி சென்ற பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, சாலை மற்றும் பாதாள சாக்கடை வசதிகள் செய்யப்பட்டதற்காக பொதுமக்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர். பின்னர் பேசிய அரவிந்த் ரமேஷ், மடிப்பாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழைநீர் தேக்கம் நீங்க, முதலமைச்சர் தலைமையில் தனிக்குழு அமைத்து நிரந்தர தீர்வு காணப்பட்டதாகக் கூறினார். இந்த நடவடிக்கைகளால், மழைக்காலங்களில் பாதிப்பு இல்லாத பாதுகாப்பான பகுதியாக மாற்றப்பட்டுள்ளது என்றும், கடந்த ஐந்து ஆண்டுகளில் முக்கியமான சாதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
