கடந்த நவம்பர் மாதம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிரணி சார்பில் புதுச்சேரி கம்பன் கலையரங்கில் சனாதன எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இதில் இந்து தெய்வங்கள் பற்றி திருமாவளவன் தெரிவித்த சில கருத்து இந்து கோவில்களையும், தெய்வங்களையும் அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும், இந்து மத உணர்வை புண்படுத்துவதுவதாக இருந்தது என இந்து அமைப்புகள் குற்றம்சாட்டின. திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, இந்து முன்னணி பொதுச்செயலாளர் கண்ணன், பெரம்பலூர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகார், தமிழக டி.ஜி.பி. மூலமாக புதுச்சேரி காவல் துறைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், திருமாவளவன் மீது மத அவமதிப்பு உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.