``கழிவுநீர் கலந்த குடிநீரால் 3 பேர் பலி?'' - அண்ணாமலை கண்டனம் | Annamalai | BJP
திருச்சி உறையூரில் கழிவு நீர் கலந்த குடிநீரால் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் பதிவில்,
குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக, மக்கள் புகாரளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், குற்றங்களை மூடி மறைக்கும் திமுக அரசின் போக்கு தொடர்வதாகவும் கூறியுள்ளார். சென்னை பல்லாவரத்திலும் இதேபோல் 3 உயிர்கள் பறிபோன நிலையில், அதனையும் மறுத்த திமுக அரசு, அதற்கான பரிசோதனை அறிக்கையை வெளியிடாமல் ஓடி ஒளிந்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். எனவே பொய்களை கூறி சமாளிக்காமல் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கி, மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
