18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு : 3 வது நீதிபதி முன்னிலையில் இன்று விசாரணை

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கின் விசாரணை 3-வது நீதிபதி சத்யநாராயணன் முன்பு இன்று தொடங்குகிறது.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு : 3 வது நீதிபதி முன்னிலையில் இன்று விசாரணை
Published on

தகுதி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், வெற்றிவேல், தங்க தமிழச்செல்வன் உள்பட 18 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நீதிபதி சுந்தர் ஆகியோர் கடந்த மாதம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதையடுத்து இந்த வழக்கு 3வது நீதிபதியின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயணனை நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து இந்த வழக்கை கடந்த 4 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்த நீதிபதி சத்தியநாராயணன், இன்று முதல் நாள்தோறும் 5 நாட்கள் விசாரிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி இன்று விசாரணை தொடங்குகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com