18 எம்.எல்.ஏ. வழக்கு - நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக மன்னிப்பு கோரினார் தங்க தமிழ் செல்வன்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு தொடர்பாக நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி தங்கத் தமிழ்ச்செல்வன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
18 எம்.எல்.ஏ. வழக்கு - நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக மன்னிப்பு கோரினார் தங்க தமிழ் செல்வன்
Published on

18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் வழக்கின் தீர்ப்பை விமர்சிக்கும் வகையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ-வான தங்க தமிழ்செல்வன் பேட்டியளித்தார். இது தொடர்பாக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர்கள் ஸ்ரீமதி, கண்ணன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அவர் சார்பில் வழக்கறிஞர் கே.ஆர்.தமிழ்மணி ஆஜராகி, பதில் மனுவை தாக்கல் செய்தார். அதில், தனது செயல்பாட்டிற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து விசாரணை செப்டம்பர் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com