சென்னை பல்கலைக்கழகத்தின், 160-ம் ஆண்டு நிறைவு விழா, பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. அதில் பேசிய முதலமைச்சர், நாட்டிலேயே உயர்கல்வியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குவதாக தெரிவித்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் அண்ணா, எம்.ஜி.ஆர். ஆய்வு மையங்கள் தொடங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார். மாணவர்கள் சிலர், புத்தகம் தூக்கும் கையில் ஆயுதங்களை தூக்குவது வருத்தம் அளிப்பதாகவும் முதலமைச்சர் பழனிசாமி வேதனை தெரிவித்தார்.