பணிமனை பணியாளர்களுக்கென 100 ஒப்பனை அறைகள் | அமைச்சர் சிவசங்கர் புதிய அறிவிப்பு

x

தலைநகர் சென்னையில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். சென்னையில், மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ் செயல்படும் ஆறு பேருந்து முனையங்கள் மேம்படுத்தப்படும் எனவும், பேருந்துகளை சுத்தப்படுத்த நவீன இயந்திரங்கள் வாங்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. பணிமனை பணியாளர்களுக்கென 100 ஒப்பனை அறைகள் மேம்படுத்தப்படும் என்றும், 50 பணி மனைகளின் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்