சங்கரன்கோவிலில் காவலர் குடியிருப்பில் காவலர் முத்துராஜ் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் முத்துராஜ் என்பவர், காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் காவலர் முத்துராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்தார். பின்பு, உடனடியாக அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்ட அவர், நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த பிற காவலர்களும் அரசு மருத்துவமனையில் குவிந்த நிலையில், டிஎஸ்பி தீவிர விசாரணை நடத்தினார்.