ஆசைவார்த்தை கூறி ஆட்டையை போட்ட காவலர் - கூட்டு சேர்ந்து செய்த குடும்ப திருட்டு

x

திருவண்ணாமலை மாவட்டம் திருவடி ராயபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் மனோகரன், ஸ்ரீபெரும்புதூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறி, மனோகரன், 91 பேரிடமிருந்து சுமார் 11 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஐஎஃப்எஸ், ஆருத்ரா கிரிப்டோ கரன்சி உள்ளிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்தவர்கள் ஏமாற்றப்பட்ட நிலையில், காவலர் மனோகரனும் பாதிக்கப்பட்டு, தான் வசூல் செய்த பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட போலீசார், மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து, காவலர் மனோகரன், அவரது மனைவி கிரிஜா, மனோகரனின் தந்தை மதியழகன் ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்