பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்
உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் நிலவிவரும் மோதல்களை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான முயற்சிகள் குறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடியுள்ளார். இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதம மோடி, தனது நண்பரான பிரான்ஸ் அதிபர் மேக்ரோனுடன் மிகச்சிறந்த உரையாடலை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். இந்த உரையாடலின் போது இந்தியா - பிரான்ஸ் இடையேயான உறவினை வலுப்படுத்துவதற்கான உறுதிபாட்டை மீண்டும் இருவரும் உறுதிப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story
