பவன் கல்யாண் படம் ரிலீஸ் - ஆசையாய் வந்த பெற்றோர்களுக்கு அதிர்ச்சி

x
  • பவன் கல்யாண் நடித்துள்ள 'ஹரிஹர வீர மல்லு' திரைப்படம் ரிலீஸ்
  • ஆந்திர மாநில துணை முதல்வர், நடிகர் பவன் கல்யாணின் 'ஹரிஹர வீர மல்லு' திரைப்படம் அதிகாலை சிறப்புக் காட்சியுடன் வெளியான நிலையில், ஹைதராபாத்தில் சிறப்புக்காட்சிக்கு குழந்தைகளுடன் வந்த பெற்றோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
  • பவன் கல்யாண் நடித்துள்ள ஹரிஹர வீர மல்லு திரைப்படம் சிறப்பு காட்சியுடன் தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் திரைக்கு வந்தது.
  • ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் சிறப்புக்காட்சியுடன் இத்திரைப்படம் திரையிடப்பட்டது. இங்கு புஷ்பா-2 திரைப்படத்தின்
  • சிறப்புக் காட்சியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தை உயிரிழந்த நிலையில், அதுபோன்ற அசம்பாவிதத்தை தவிர்ப்பதற்காக, திரைப்படத்தை பார்க்க குழந்தைகளுடன் வந்திருந்த பெற்றோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
  • ஹரிஹர வீர மல்லு படம் திரையிடப்பட்ட பெரும்பாலான திரையரங்குகளில் ரசிகர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
  • ஆந்திர மாநிலம் கடப்பாவில் திரையரங்கம் முன்பு ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்