பெற்ற மகளே தாயை கடத்தி, சித்திரவதை | ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு நேர்ந்த கொடூரம்

x

மூன்று மாதமாக சொத்தை எழுதி கொடுக்க சொல்லி மகள்கள் கொடுமை செய்வதாக மூதாட்டி ஒருவர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரம் பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர் விசாலாட்சியின் மூத்த மகள் சென்னையில் திருமணம் செய்து வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் இரவு, விசாலாட்சி வீட்டிற்கு வந்த மூத்த மகள், அவரை அடித்து, சென்னைக்கு கடத்தி வந்து மூன்று மாதங்களாக சித்தரவதை செய்து, தனது வீட்டில் இருந்த வீட்டு பத்திரம், ரொக்கம், ஆறரை பவுன் நகைகள் ஆகியவற்றை திருடியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தனது பொருட்களை மீட்டு தருமாறும், தன்னை கொடுமைப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படியாகவும் நெல்லை மாவட்ட ஆட்சியரகத்தில் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்