தினத்தந்தி நாளிதழ் சார்பாக நடந்த "வெற்றி நிச்சயம்" நிகழ்ச்சி...தொடங்கி வைத்த ஆட்சியர்

x

தினத்தந்தி நாளிதழ் சார்பாக நடந்த "வெற்றி நிச்சயம்" நிகழ்ச்சி...தொடங்கி வைத்த ஆட்சியர்

தினத்தந்தி நாளிதழ் மற்றும் கோவை கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவை இணைந்து, ஊட்டியில் "வெற்றி நிச்சயம்" நிகழ்ச்சியை நடத்தினர். ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியை, மாவட்ட ஆட்சியர் அருணா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து, பள்ளி முதன்மை கல்வி அதிகாரி கீதா, மருத்துவத்துறை அதிகாரி காயத்ரி, வேளாண்மை துறை அதிகாரி சுதாலட்சுமி உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு, தங்களது துறையில் மேல்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தனர். முடிவில், கோவை தினத்தந்தி நாளிதழ் மேலாளர் ஆர்.சரவணன் நன்றி கூறினார். முன்னதாக, தினத்தந்தி சார்பாக மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டதுடன், புத்தக கண்காட்சியும் நடத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்