"ஒன்றே குலம் .. ஒருவனே தேவன் .." இந்து கோவிலில் இஸ்லாமியர் வழிபாடு - இந்த மனசுதான் சார் கடவுள் ..!

கரூரில் இந்து கோவிலில் இஸ்லாமியர் ஒருவர் வழிபாடு நடத்திய சுவாரஸ்ய நிகழ்வு - நட்புக்காகவும், மத நல்லிணக்கத்திற்காகவும் கோவில் யாக பூஜையில் கலந்து கொண்டதாக கருத்து.
x

கரூரில் இந்து கோவிலில் இஸ்லாமியர் ஒருவர் வழிபாடு நடத்திய சுவாரஸ்ய நிகழ்வு - நட்புக்காகவும், மத நல்லிணக்கத்திற்காகவும் கோவில் யாக பூஜையில் கலந்து கொண்டதாக கருத்து.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜர் மார்க்கெட் ரூபாய் 6.7 கோடி மதிப்பீட்டில் புதிதாக வணிக வளாகம் கட்டுவதற்கு கட்டுமான பணி தொடங்குவதற்கு முன்பாக, மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்ற உள்ளதால் மார்க்கெட்டில் உள்ள தங்க விநாயகர் கோவிலில் இன்று யாக வேள்வி பூஜை நடைபெற்றது. யாகத்தை அனைத்து வணிகர் சங்க மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராஜு தொடங்கி வைத்தார். பொதுமக்கள் ஏராளமானோர் யாக பூஜையில் கலந்து கொண்டனர்.இந்த பூஜைக்கு கரூர் காமராஜர் மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் அசோக்குமார் பல்வேறு நபர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். குறிப்பாக கரூரைச் சேர்ந்த ஹக்கீம் என்ற வியாபாரி ஒருவரும் இந்த சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார். அப்போது கோவில் அர்ச்சகர் அவருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்த சுவாரஸ்ய நிகழ்வு அரங்கேறியது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து அவரிடம் கேட்டபோது நட்பின் பெயரிலும், மத நல்லிணக்கத்தின் பெயரிலும் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்ததாக தெரிவித்தார். யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற கொள்கையை கடைபிடித்து வருவதாகவும் கருத்துத் தெரிவித்தார்.கரூரில் இந்து கோவிலில் இஸ்லாமியர் ஒருவர் வழிபாடு நடத்தியது இந்து மற்றும் இஸ்லாமிய சகோதரத்துவத்தின் வெளிப்பாடாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்