CPR வகித்த பொறுப்புக்கு வரும் குஜராத் ஆளுநர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

x

குஜராத் ஆளுநருக்கு கூடுதல் பொறுப்பு

குஜராத் மாநில ஆளுநராக இருக்கும் ஆச்சார்ய தேவ்ரத்துக்கு, கூடுதலாக, மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநில ஆளுநராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன், குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, காலியாக உள்ள மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பதவிக்கு, குஜராத் மாநில ஆளுநராக இருக்கும் ஆச்சார்ய தேவ்ரத்துக்கு, கூடுதல் பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்