காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (26-08-2025) | 9 AM Headlines | Thanthi TV

x
  • முன்னரே முடிவான நிகழ்ச்சி காரணமாக, திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் பவள விழா நிகழ்ச்சியில் பங்கேற்க இயலாது என, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்...
  • இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவிகிதம் வரி விதித்த விவகாரம்....வரி விதிப்பை விவரிக்கும் வரைவு அறிவிப்பை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது......
  • 2015 முதல் 2018 வரை திண்டுக்கல் மாநகராட்சியில் 17 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது...புகார் தொடர்பாக அப்போதைய ஆணையர் உட்பட 5 அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவன உரிமையாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது...
  • விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு மருத்துவமனையில், ஊசி செலுத்திய 5 குழந்தைகள் காய்ச்சல் மற்றும் வலிப்பு ஏற்பட்டு துடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது...
  • முன்னரே முடிவான நிகழ்ச்சி காரணமாக, திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் பவள விழா நிகழ்ச்சியில் பங்கேற்க இயலாது என, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்...
  • குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் தெற்கிலிருந்து வருவது இயல்பானது என, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
  • விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்காக, சென்னையில் ஆயிரத்து 500 விநாயகர் சிலை வைக்க காவல் துறை அனுமதி அளித்துள்ளது...
  • விநாயகர் சதுர்த்தியன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி சென்னையில் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.....
  • விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன....இன்று 675 பேருந்துகளும், நாளை மறுநாள் 610 பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது....
  • சாலையோர கொடிக்கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது...சிபிஎம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது...
  • சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பங்கேற்ற நிலையில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினர்...
  • 2 ஆயிரத்து 430 நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகள் பயன்பெறும் வகையில், காலை உணவு திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.....

Next Story

மேலும் செய்திகள்