காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (17.08.2025) | 9 AM Headlines | ThanthiTV

x
  • இந்தியா வந்தடைந்த விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லாவுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு....மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், டெல்லி முதல்வர் ரேகா குப்தாவும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து...
  • நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு...சென்னையில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல்...
  • சென்னை மற்றும் திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் 10 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு...பூட்டப்பட்டிருந்த அறையில் இருந்து பல முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்...
  • திண்டுக்கல், சீலப்பாடியில் பழனி எம்.எல்ஏ. ஐ.பி. செந்தில்குமார் வீட்டில் நடந்த 15 மணி நேர சோதனை நிறைவுவள்ளலார் நகரில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா வீட்டிலும் 17 மணி நேரம் சோதனை முடிந்த‌து....
  • சென்னையில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகன் செந்தில்குமார் விடுதி அறைக்குள் அத்துமீறி நுழைந்ததாக புகார்...அமலாக்கத்துறை மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு...
  • அமலாக்கத்துறையை வைத்து திமுகவை மிரட்ட முடியாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டம்...சோதனை என்று சொன்னவுடன் வந்து கூட்டணியில் சேர்வதற்கு நாங்கள் என்ன எடப்பாடி பழனிச்சாமியா? என்றும் கேள்வி...
  • பல அமைச்சர்களின் வீட்டு கதவை அமலாக்கத்துறை தட்டப்போகிறார்கள் என்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...அதிமுக ஆட்சி அமையும்போது திமுக அரசின் 5 ஆண்டு ஊழல்களும் விசாரிக்கப்படும் என்றும் உறுதி...
  • புதுச்சேரி அருகே சங்கமித்ரா மண்டபத்தில், காலை 10 மணிக்கு நடக்கும் பாமக சிறப்பு பொதுக்குழுவுக்கு ஏற்பாடு தயார்...அன்புமணி புகைப்படங்கள் இல்லாமல், ராமதாஸ் புகைப்படங்கள் மட்டும் வைப்பு...
  • சாதி தான் தனது முதல் எதிரி என்று காட்டமாக தெரிவித்த மக்கள் நீதி ம‌ய்யம் தலைவர் கமல்ஹாசன்...இந்தியாவின் பலவீனமே அது தான் என்றும், திருமாவளவன் பிறந்த‌நாள் விழாவில் சூளுரை...
  • வரும் 22ம் தேதி தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா...நெல்லையில் பாஜக பூத் கமிட்டி மாநாட்டில்பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு...
  • வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பீகாரில் 16 நாட்கள் பிரம்மாண்ட பேரணியை இன்று தொடங்குகிறார் ராகுல் காந்தி...ஆயிரத்து 300 கிலோ மீட்டருக்கு நடைபெறும் யாத்திரையில், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியினர் பங்கேற்க வாய்ப்பு...
  • அடுத்து வர உள்ள ஜி.எஸ்.டி சீர்திருத்தம் மிகப்பெரிய கேம் சேஞ்சராக இருக்கும்...2047ஆம் ஆண்டுக்குள் ஒற்றை அடுக்கு ஜி.எஸ்.டி அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்...
  • மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயிக்கும் விவகாரம்...அரசியலமைப்பு சட்டத்தில் குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு எழுத்து பூர்வமாக பதில்...

Next Story

மேலும் செய்திகள்