காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (14.08.2025) | 9 AM Headlines | ThanthiTV

x
  • உலகம் முழுவதும் வெளியானது ரஜினியின் 'கூலி' திரைப்படம்...பேனர் முன் கேக் வெட்டி ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடிய லண்டன் ரசிகர்கள்...
  • திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்த்...திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்து...
  • நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தின் பிரத்யேக காட்சியைப் பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...படக்குழுவினரை பாராட்டிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.....
  • நடிகர் ரஜினிகாந்தின் 'கூலி' திரைப்படம் 'LCU' படமல்ல என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவிப்புஎந்த ஒரு ஸ்பாய்லரையும் பகிராமல் இருக்குமாறு ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள்
  • தமிழகத்தில் வெளியானது ரஜினியின் 'கூலி' திரைப்படம்...தியேட்டம் முன்பு குவிந்த ரஜினி ரசிகர்கள், ஆட்டம் பாட்டத்துடன் உற்சாக கொண்டாட்டம்...
  • சுதந்திர தின விடுமுறையை ஒட்டி உதகை-குன்னூர், உதகை - கேத்தி இடையே சிறப்பு மலை ரயில்...நாளை முதல் 17ஆம் தேதி வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு...
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப்பயணம்....விஜயகாந்த் எம்.எல்.ஏ வாக இருந்தபோது கட்டித் தந்த பாலத்தில் முழங்காலிட்டு வணங்கி மரியாதை....
  • வாக்குக்காக சிறுபான்மையினரை ஏமாற்றுகிறது திமுக....திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சு....
  • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணியளவில் கூடுகிறது தமிழக அமைச்சரவை
  • செங்கல்பட்டில் ஜப்பான் நிறுவனம் 700 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தாகும் புரிந்துணர்வு ஒப்பந்தம்....
  • சென்னை மாநகராட்சியில், தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு...தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...
  • கைது நடவடிக்கையின்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்
  • பணி நிரந்தரம் கோரி சென்னை ரிப்பன் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் நள்ளிரவில் கைது....தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்த நிலையில், நடவடிக்கை....

Next Story

மேலும் செய்திகள்