காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (24.08.2025)| 11 AM Headlines| ThanthiTV
- ஜம்மு - காஷ்மீரில் தொடர் மழை காரணமா சஹர் காட் ஆற்றில் வெள்ளப்பெருக்கு....
- பிஜி நாட்டின் பிரதமர் சிதிவேனி ரபுகா, 3 நாள்அரசு முறை பயணமாக இந்தியா வருகை....குடியரசு தலைவர் திரௌபதி முர்மு,பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்திக்கத் திட்டம்....
- கேரளாவில் வயநாடு பகுதியை சேர்ந்த 45 வயது நபருக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல் ....ஏற்கனவே 6 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவருக்கு பாதிப்பு உறுதி.....
- கேரள மாநிலம் மலப்புரத்தில் பேருந்தின் ஜன்னலோர துளையில் சிக்கிக்கொண்ட பள்ளி மாணவியின் விரல்...பேருந்தின் தகரத்தை வெட்டி எடுத்து மாணவியின் விரலை வெளியே எடுத்த தீயணைப்புத்துறையினர்...
- நாகர்கோவில், கன்னியாகுமரி இடையே இரட்டை ரயில் பாதை கட்டுமான பணிகளால் நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில்கள்....அவதி அடைந்த பயணிகள் பேருந்துகள் மூலம் அனுப்பிவைப்பு...
- நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே விரட்ட முயன்ற வனத்துறையினரை ஆக்ரோஷமாக விரட்டிய மக்னா காட்டு யானை....சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு....
- சென்னையில் நிச்சயமான பிறகு காதலன் திருமணம் செய்ய மறுத்ததால், காதலி மாடியில் இருந்து குதித்து தற்கொலை.....
- காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்வு....வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கன அடியிலிருந்து 16 ஆயிரம் கன அடியாக உயர்ந்த நீர்வரத்து...
- பீகார் மாநிலம் பர்னியாவில் வாக்காளர் அதிகார யாத்திரையில் ஈடுபட்டுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி....தொண்டர்கள் சூழ பைக்கில் பேரணியாக சென்ற ராகுல்காந்தி மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ்....
- இன்று தமிழ்நாடு வருகிறார் இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி....
- ஆகஸ்ட் 26ம் தேதி முதல் காலை உணவு திட்டம் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிப்பு....
Next Story
