காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (17.08.2025) | 11 AM Headlines | ThanthiTV

x
  • தமிழக கேரள எல்லைப்பகுதியான வாளையாரில் சாலையில் நின்ற லாரி மீது மோதிய கார்....விபத்தில் சென்னையைச் சேர்ந்த 2 பெண்கள் உயிரிழந்த பரிதாபம்....
  • கன்னியாகுமரி அருகே நடுக்கடலில் மீன் பிடிப்பது தொடர்பாக மீனவர்கள் மோதிக்கொண்ட விவகாரம்....30 மீனவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவானவர்களுக்கு வலைவீச்சு.....
  • ராமநாதபுரம் அருகே ரயில்வே கேட்டை மூடாமல் அலட்சியப் போக்குடன் செயல்பட்ட வடமாநில கேட் கீப்பர் சஸ்பெண்ட்....ரயில்வே மதுரை கோட்ட நிர்வாகம் உத்தரவு....
  • மதுரையில் வருகிற 21ம் தேதி நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு...மாநாட்டுத் திடலில் 100 அடி உயரத்தில் பிரமாண்ட கொடிக்கம்பம் நடுவதற்கான பணிகள் தொடக்கம்.....
  • அமைச்சர் ஐ.பெரியசாமி வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை....சொத்து ஆவணங்கள், முதலீடு விவரங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், பணம், நகை எதுவும் கைப்பற்றப்படவில்லை எனவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல்....
  • வாக்காளர் பட்டியல் குறித்த ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு தொடர்பாக, இன்று விளக்கம் அளிக்கிறது தேர்தல் ஆணையம்..பிற்பகல் 3 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்...
  • வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பீகாரில் 16 நாட்கள் பிரம்மாண்ட பேரணியை இன்று தொடங்குகிறார் ராகுல் காந்தி...ஆயிரத்து 300 கிலோ மீட்டருக்கு நடைபெறும் யாத்திரையில், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியினர் பங்கேற்க வாய்ப்பு...
  • தமிழ்நாட்டில் முதல் முறையாக விவசாயிகளுக்கு இ-கிசான் கிரெடிட் கார்டு மூலம் விவசாயக் கடன்...தர்மபுரியில் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்....
  • தர்மபுரி மாவட்டம் தடங்கம் பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் 70 ஆயிரத்து 427 பேருக்கு சுமார் 830 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்....ஆயிரத்து 44 புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்....
  • பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளுநர் கம்பு சுத்தலாம்... தமிழ்நாட்டில் கம்பு சுத்தக் கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்....தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து இருந்து தமிழையும் தமிழ்நாட்டையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் பேச்சு....
  • தமிழ்த்தாய் வாழ்த்தை மதிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் மலிவான அரசியல் செய்கிறார்....தர்மபுரியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு....

Next Story

மேலும் செய்திகள்