காலை 11மணி தலைப்புச் செய்திகள் (13.08.2025)| 11 AM Headlines | ThanthiTV

x
  • முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்...வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்கள் குறித்து பயிற்சி அளிக்க திட்டம்.,..
  • திமுகவில் இணைந்தார், அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன்...அனைத்து மாநிலங்களின் நலனையும் முதலமைச்சர் ஸ்டாலின் காக்கிறார் என பேட்டி...
  • விழுப்புரம் மாவட்டம் விரட்டிகுப்பம் அருகே தனியார் பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவன் பலி..பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் விசாரணை..
  • திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என கண்டறிந்து பணம் பறித்ததாக புகார்...கணவன், மனைவி உள்பட ஐந்து பேரை கைது செய்து போலீசார் விசாரணை...
  • ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் கிடந்த ஆண் சடலம்...கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில்போலீசார் விசாரணை...
  • திரைத்துறையில் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்துக்கு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து...நாளை ரிலீஸாகும் கூலி படம் Mass Enterntainer-ஆக வந்திருப்பதாகவும் பாராட்டு...
  • மகாராஷ்டிர மாநிலம் தானே அருகே, வாகன சோதனையின் போது 32 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்...இரண்டு பேரை கைது செய்து போலீசார் விசாரணை...
  • காஷ்மீரின் உதம்பூர் பகுதியில் பலத்த மழை காரணமாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சாலைகள்...5 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு...
  • தைவானின் தைதுங் கவுன்டியில் TAITUNG COUNTY, போடுல் Podul சூறாவளி காரணமாக கடல் சீற்றம்...கரையோரம் வசித்த நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்...

Next Story

மேலும் செய்திகள்