ஐபிஎல் பைனல் விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா?

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னதாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கச்சேரி நடைபெற உள்ளது.
x

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னதாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கச்சேரி நடைபெற உள்ளது. இரவு 8 மணிக்கு இறுதிப் போட்டி தொடங்கும் நிலையில், 6 மணியில் இருந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. ரன்வீர் சிங் உள்ளிட்ட திரை பிரபலங்கள், முன்னாள் கிரிக்கெட் வீர‌ர்கள் பங்கேற்க உள்ளனர். கடந்த 75 ஆண்டுகளாக பல்வேறு சாதனைகளை படைத்துள்ள இந்திய கிரிக்கெட்டை பெருமைப்படுத்தும் விதமாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கச்சேரி நடைபெற உள்ளது. இறுதிப் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரும் நேரில் காண உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்