மருத்துவக் கலந்தாய்வு - ஒரே சுற்றில் மொத்த இடங்களையும் அள்ளிய மாணவர்கள்
மருத்துவக் கலந்தாய்வு - ஒரே சுற்றில் மொத்த இடங்களையும் அள்ளிய மாணவர்கள்
அரசு மற்றும் தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கான மருத்துவக் கலந்தாய்வில் ஒரே சுற்றில் மொத்த இடங்களையும் மாணவர்கள் அள்ளினர்.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், காலியிடங்களின் விவரத்தைக் கடந்த 14-ஆம் தேதி மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு வெளியிட்டது.
அதன்படி அரசு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிப்பில் 36 அரசு மருத்துவக் கல்லூரியில் 3,835 இடங்களும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரியில் 91 இடங்களும்,
22 மருத்துவக் கல்லூரியில் 3302 இடங்களும், 4 தனியார் பல்கலைக் கழகத்தில் 529 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 20 பல் மருத்துவக்கல்லூரியில் 1797 இடங்கள் காலியாக இருந்தன.
இந்த நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 7513 மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்கும், நிர்வாக ஒதுக்கீட்டில் 2,004 மாணவர்கள் சேர்வதற்கும் ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.
