ஆன்லைன் வியாபாரத்தில் ரூ.15 லட்சம் இழப்பு - சலூன் கடைக்காரர் தற்கொலை
ஆன்லைன் வியாபாரத்தில் 15 லட்சம் ரூபாயை இழந்த விரக்தியில் சலூன் கடைக்காரார் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாமக்கல்லில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் பிரசன்னா நகரைச் சேர்ந்த ரூபன் என்பவர் கடந்த 20ம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது பூச்சி கொல்லி மருந்தை குடித்து, உயிருக்கு ஆபத்தான நிலையில், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் ரூபன் சிகிச்சை பலனின்றி ரூபன் உயிரிழந்தார். இந்நிலையில், டெலிகிராம் செயலி மூலம் ஆன்லைன் வியாபாரத்தில் 15 லட்சம் ரூபாயை இழந்த விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
Next Story
