🔴LIVE : Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (04.12.2025) |1 PM Headlines | ThanthiTV
- சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு... வேலூர், திருப்பத்தூர், நீலகிரி, கோவை, நெல்லை உட்பட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது... தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்பு... சென்னை உட்பட வட மாவட்டங்களில் நாளைதான் படிப்படியாக மழை விலகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...
- திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதித்த உத்தரவுக்கு எதிராக, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை...தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்டதால், சமூக நல்லிணக்கம் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக, மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அரசு தரப்பில் வாதிடப்பட்டது... CISF பாதுகாப்பு நீதிமன்ற வளாகத்திற்கு மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டது...
- பெங்களூரு, மும்பை, டெல்லி உட்பட நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது...ஊழியர்கள் பற்றாக்குறை, தொழில்நுட்ப சிக்கலால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்...
- பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு மாவட்டங்களில், ஆட்சியர் அலுவலம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்... சேலம், புதுக்கோட்டை, திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது...
- கடினமான காலங்களில் தனக்கு உறுதுணையாக இருந்தவர் ஏ.வி.எம்.சரணவன் என்று ரஜினிகாந்த் உருக்கமாக தெரிவித்தார்...புதிய படத்தில் நடிப்பது குறித்து பேசி வந்த நிலையில் சரவணன் மறைந்துவிட்டதாக கூறினார்..
Next Story
