ZOO-வில் இருந்து தப்பித்து விவசாயியை கடித்த சிங்கம் சுட்டுக் கொலை

x

துருக்கியில் உயிரியல் பூங்காவில் இருந்து தப்பித்த சிங்கம் ஒன்று, விவசாயி ஒருவரை கடித்து குதறியதால் சுட்டுக் கொல்லப்பட்டது. ஜீயுஸ் (Zeus) என பெயரிடப்பட்ட ஆண் சிங்கம் ஒன்று, மனவ்காட் (Manavgat) பகுதியில் உள்ள லேண்ட் ஆப் லயன்ஸ் (Land of Lions) என்ற பூங்காவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை த‌ப்பித்துள்ளது. அருகில் இருந்த விவசாய பகுதிக்கு சென்ற சிங்கம், அங்கு இருந்த 53 வயதான சுலேமான் கிர் (Suleyman Kir) என்ற விவசாயியை தாக்கியுள்ளது. கழுத்து, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயமடைந்த நிலையில், சிங்கம் தப்பியோடி தலைமறைவானது. இதையடுத்து சிங்கத்தை பிடிக்க அதிகாரிகள் முயற்சி செய்தும் பலனளிக்காத‌தால், துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.


Next Story

மேலும் செய்திகள்