யூதா கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் - ஆர்வமாக பங்கேற்ற மாணவர்கள்

x

குமரி மாவட்டம் தூத்தூர் புனித யூதா கலைக் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

தூத்தூர் பகுதியில் உள்ள புனித யூதா கலை கல்லூரி மற்றும் மத்திய தொழிற்பயிற்றுனர் பயிற்சி நிறுவனம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதனை கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் கல்லூரி நிர்வாக அலுவலரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான பிரபுதாஸ், கல்லூரி முதல்வர் ஆன்லெட், தென்மண்டல மத்திய தொழிற்பயிற்றுநர் பயிற்சி அலுவலர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமில் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு, மாணவ மாணவிகளை தேர்வு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்