இறுதிக்கட்டத்தில் ஐபிஎல் திருவிழா.. முதல் கோப்பையில் முத்தமிடுமா குஜராத்?

குஜராத்தில் இன்று நடைபெற உள்ள ஐபிஎல் இறுதி போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் போட்டியிடுகின்றன.
x

குஜராத்தில் இன்று நடைபெற உள்ள ஐபிஎல் இறுதி போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் போட்டியிடுகின்றன.அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 8 மணிக்கு போட்டி நடைபெற உள்ளது. இதில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத்தும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தானும் மோதுகின்றன. ஐபிஎல் வரலாற்றில் முதல் கோப்பையை வென்றுள்ள ராஜஸ்தான், 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதே நேரத்தில், குஜராத்துக்கு இது முதல் போட்டி என்பதால், 15 ஆவது ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் உள்ளன. இதனால், கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்